ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று மோதல்


ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று மோதல்
x
தினத்தந்தி 17 Oct 2017 7:09 PM GMT (Updated: 17 Oct 2017 7:09 PM GMT)

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

டாக்கா,

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றி), பாகிஸ்தான் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா), ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பெற்ற மலேசியா (3 வெற்றி), தென்கொரியா (2 வெற்றி, ஒரு தோல்வி) ஆகிய 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்றில் (சூப்பர்-4) ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

2-வது சுற்றில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் மலேசியா-பாகிஸ்தான் (பிற்பகல் 3 மணி), இந்தியா-தென்கொரியா (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் தென்கொரியா அணி மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டது. இந்திய அணி தனது எல்லா லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறது. வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story