ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா- தென்கொரியா ஆட்டம் டிரா


ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா- தென்கொரியா ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 18 Oct 2017 10:45 PM GMT (Updated: 18 Oct 2017 10:53 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

டாக்கா,

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த மலேசியா, தென்கொரியா அணிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதன்முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

2-வது சுற்றில் நேற்று இந்திய- தென்கொரியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முதல் பாதியில் இரண்டு அணிகளும் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை வீணடித்தன. இதனால் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் இரண்டாவது பகுதி தொடங்கியதும் ஆட்டத்தின் 41- வது நிமிடத்தில் தென்கொரியா அணியின் லீ சூன்க்சூன் முதல் கோல் போட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பின்னர் இந்தியாவின் முயற்சிகள் அணைத்தும் தொடர்ந்து வீணாகிக்கொண்டே இருந்தன. இந்த நிலையில் இந்தியாவின வெற்றி பறிபோய்விடுமோ என்று ரசிகர்கள் தவித்துக்கொண்டிருந்த நிலையில் ஆட்டத்தில் கடைசி சில நிமிடங்கள் எஞ்சியிருந்த போது இந்திய அணியின் குர்ஜந்த் சிங் பந்தை கொல் கம்பத்திற்குள் மின்னல் வேகத்தில் செலுத்தி அசத்தினார். இதனால் தோல்வியின் பிடியில் இருந்து இந்தியா தப்பியது. இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

முன்னதாக 3 மணிக்கு நடைபெற்ற மலேசியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

Next Story