துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 11 Jan 2017 9:45 PM GMT (Updated: 11 Jan 2017 8:28 PM GMT)

துளிகள் * தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும், 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது.

* தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும், 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணியில் ஆல்-ரவுண்டர் திக்‌ஷி டி சில்வா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் லக்‌ஷன் சன்டகன் 20 ஓவர் போட்டி அணியில் முதல்முறையாக இடம் பெற்றுள்ளார்.

* வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரை முறையே நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இடது கண்ணில் நடந்த ஆபரேஷனுக்கு பிறகு ராஸ் டெய்லர் இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணிக்கு திரும்பி இருக்கிறார்.

* லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் பல மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பதவியை இழக்கிறார்கள். இதனால் சில மாநில சங்கங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெற்ற போட்டிகளை ஏதாவது காரணம் காட்டி நடத்த மறுத்து வருகின்றன. இந்த நிலையில் லோதா கமிட்டி சார்பில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரத்துடன் நடைபெறும் போட்டிகளுக்கு இடையூறு எதுவும் ஏற்படுத்தமாட்டோம் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இருந்து உறுதிமொழி பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டங்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நேற்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story