ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த்


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த்
x
தினத்தந்தி 24 Jun 2017 8:37 PM GMT (Updated: 24 Jun 2017 8:37 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 11–வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், 4–ம் நிலை வீரரான சீனாவின் ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 21–10, 21–14 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் ஷி யுகியை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

கவுரவமிக்க சூப்பர் சீரிஸ் வகை போட்டியில் தொடர்ந்து 3–வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து இருக்கிறார். ஏற்கனவே சிங்கப்பூர் ஓபன் (2–வது இடம்), இந்தோனேஷிய ஓபன் (சாம்பயின்ஸ்) ஆகிய சூப்பர் சீரிஸ் போட்டிகளிலும் அவர் இறுதிசுற்றை எட்டியிருந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற உலக அளவில் 5–வது வீரர், இந்தியாவில் முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்குடன் மல்லுகட்டுகிறார். தரவரிசையில் 6–வது இடத்தில் உள்ள சென் லாங்கை ஸ்ரீகாந்த் ஒரு போதும் வீழ்த்தியது கிடையாது. அவருக்கு எதிராக இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story