பிரிமீயர் பேட்மிண்டன் போட்டியில் மேலும் இரு அணிகள் சேர்ப்பு


பிரிமீயர் பேட்மிண்டன் போட்டியில் மேலும் இரு அணிகள் சேர்ப்பு
x
தினத்தந்தி 16 Aug 2017 10:15 PM GMT (Updated: 16 Aug 2017 8:47 PM GMT)

3–வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி (பி.பி.எல்.) டிசம்பர் 22–ந்தேதி முதல் ஜனவரி 14–ந்தேதி நடத்தப்படுகிறது.

புதுடெல்லி,

டெல்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், அவாத் வாரியர்ஸ் (லக்னோ), ஐதராபாத் ஹன்டர்ஸ், சென்னை ஸ்மா‌ஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகளுடன் இந்த முறை ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், கவுகாத்தி ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6 கோடியாகும். உலக அளவில் பேட்மிண்டன் லீக் போட்டிக்கு அதிக பரிசுத்தொகை வழங்கும் தொடர் இது தான். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.3 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1½ கோடியும் பரிசுத்தொகையாக பெறும்.

இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ‘இந்த சீசனுக்கான பி.பி.எல். போட்டிக்கு ஆமதாபாத், கவுகாத்தி அணிகளை வரவேற்கிறேன். இந்த போட்டி பிரபலமடைந்திருப்பதே புதிய அணிகளின் வருகை பிரதிபலிக்கின்றன’ என்று குறிப்பிட்டார்.


Next Story