தமிழ்நாடு நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு சந்திரசேகர் செயலாளர் ஆனார்


தமிழ்நாடு நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு சந்திரசேகர் செயலாளர் ஆனார்
x
தினத்தந்தி 12 Nov 2017 8:57 PM GMT (Updated: 12 Nov 2017 8:57 PM GMT)

தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் 2017 முதல் 2020–ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் 2017 முதல் 2020–ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். டாக்டர் சடயவேல் கைலாசம் தலைவராகவும், சென்னை மாவட்ட முன்னாள் விளையாட்டு அதிகாரியும், நீச்சல் பயிற்சியாளருமான டி.சந்திரசேகர் செயலாளராகவும், சி.ஸ்ரீதர், ஆர்.என்.ஜெயபிரகாஷ், டாக்டர் கே.காந்தராஜ், ஆர்.மோகன், ஜெ.ஜெயசூரியன், கே.கே.முகுந்தன், எம்.முனியாண்டி (மாநகராட்சி நீச்சல் பயிற்சியாளர்), டி.எஸ்.குமாரசாமி, டாக்டர் சி.பி.ஸ்ரீகுமார், ஸ்டாலின் ஆரோக்யராஜ் ஆகியோர் துணைதலைவராகவும், டி.வைத்தீஸ்வரன், கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இணைசெயலாளராகவும், கே.டி.முரளிதரன் பொருளாளராகவும், ஆர்.பாலாஜி, சந்திரிகா ஜெயசந்திரன், ஆர்.துரை, எஸ்.தமிழ்செல்வன், சி.பார்த்தீபன், டாக்டர் எம்.சண்முகபிரியா, சாஜி செபாஸ்டியன், பி.கணேசன், ஜி.ரமேஷ், பி.கிரிஷ், சரத் கே.முகுந்தன், எஸ்.காமேஷ்ராஜ், சி.ஐஸ்வர்யா, எல்.முரளிகிருஷ்ணன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வானார்கள்.


Next Story