ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் நிஷாந்த் தேவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்


ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் நிஷாந்த் தேவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

நிஷாந்த் தேவ், கால்இறுதியில் அமெரிக்காவின் ஒமாரி ஜோன்சை எதிர்கொள்கிறார்.

பஸ்டோ அர்சிஜியோ,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான உலக தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாந்த் தேவ், கிரீஸ் நாட்டின் கிறிஸ்டோஸ் கரைடிஸ்சை சந்தித்தார்.

தொடக்கம் முதலே சரமாரி குத்துகளை விட்டு எதிராளியை திணறடித்த அரியானாவை சேர்ந்த 23 வயதான நிஷாந்த் தேவ் 5-0 என்ற கணக்கில் கிறிஸ்டோஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். நிஷாந்த் தேவ், கால்இறுதியில் அமெரிக்காவின் ஒமாரி ஜோன்சை எதிர்கொள்கிறார்.

கால்இறுதியில் வெற்றி பெற்றால் அவர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார். இந்த தகுதி சுற்று போட்டியில் 2 வீராங்கனைகள் உள்பட 9 பேர் அடங்கிய இந்திய அணி கலந்து கொண்டதில் நிஷாந்த் தேவ் மட்டுமே களத்தில் நீடிக்கிறார்.


Next Story