கைப்பந்து லீக்: ஆமதாபாத் முதல் வெற்றி


கைப்பந்து லீக்: ஆமதாபாத் முதல் வெற்றி
x

கோப்புப்படம்

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த சூப்பர்5 சுற்று ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணி, டெல்லி டூபான்சை சந்தித்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் ஆமதாபாத் அணி 15-10, 11-15, 10-15, 15-12, 18-16 என்ற செட் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.

தொடர்ச்சியாக 2 தோல்வி கண்ட ஆமதாபாத் அணிக்கு இது முதல் வெற்றியாகும். டெல்லிக்கு முதல் தோல்வியாகும். இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை மீட்டியார்ஸ்- பெங்களூரு டார்படோஸ் அணிகள் மோதுகின்றன.


Next Story