கத்தார் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா ஜோடி


கத்தார் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா ஜோடி
x
தினத்தந்தி 16 Feb 2017 9:00 PM GMT (Updated: 16 Feb 2017 8:37 PM GMT)

பெண்களுக்கான கத்தார் டோட்டல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்து வருகிறது.

டோகா,

பெண்களுக்கான கத்தார் டோட்டல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4–6, 6–0, 4–6 என்ற செட் கணக்கில் 32–ம் நிலை வீராங்கனை ரஷியாவின் டாரியா கசட்கினாவிடம் வீழ்ந்தார். நிறைய தவறுகளை இழைத்ததால் அதிர்ச்சி தோல்வியை கெர்பரால் தவிர்க்க முடியவில்லை. மற்றொரு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி(டென்மார்க்) 7–5, 6–3 என்ற நேர் செட்டில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறினார்.

இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6–2, 6–4 என்ற நேர் செட்டில் ராக்யூல் அடாவோ (அமெரிக்கா)– யுபான் சூ (சீனா) இணையை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது.


Next Story