மியாமி டென்னிஸ்: வோஸ்னியாக்கி, சிபுல்கோவா வெற்றி


மியாமி டென்னிஸ்: வோஸ்னியாக்கி, சிபுல்கோவா வெற்றி
x
தினத்தந்தி 24 March 2017 11:15 PM GMT (Updated: 24 March 2017 6:43 PM GMT)

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–1, 6–2 என்ற நேர் செட்டில் லாப்சென்கோவை (அமெரிக்கா) துவம்சம் செய்தார். மற்றொரு ஆட்டத்தில் சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6–3, 6–2 என்ற நேர் செட்டில் செப்டிராக்கை (பராகுவே) வீழ்த்தினார். முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிறிஸ்டினா மெக்ஹாலேவுக்கு (அமெரிக்கா) எதிரான ஆட்டத்தில் 0–6, 2–3 என்று பின்தங்கி இருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அக்னீஸ்கா ராட்வன்கா (போலந்து), லூசி சபரோவா (செக்குடியரசு) ஆகியோரும் 3–வது சுற்றை எட்டினர்.


Next Story