சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிபோட்டியில் முகுருஜா–சிமோனா ஹாலெப்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிபோட்டியில் முகுருஜா–சிமோனா ஹாலெப்
x
தினத்தந்தி 20 Aug 2017 8:55 PM GMT (Updated: 20 Aug 2017 8:55 PM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் 7–6 (7–4), 7–6 (12–10) என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 7–6 (7–3), 7–6 (7–4) என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரரை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 6–வது இடத்தில் இருக்கும் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6–3, 6–2 என்ற நேர்செட்டில் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு அரைஇறுதியில் உலக தர வரிசையில் 2–வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–2, 6–1 என்ற நேர்செட்டில் 151–ம் நிலை வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்சை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் முகுருஜா–சிமோனா ஹாலெப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் சிமோனா ஹாலெப் வெற்றி பெற்றால் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story