அமெரிக்க ஓபன்: அஸரென்கா விலகல்


அமெரிக்க ஓபன்: அஸரென்கா விலகல்
x
தினத்தந்தி 22 Aug 2017 9:30 PM GMT (Updated: 22 Aug 2017 8:00 PM GMT)

அமெரிக்க ஓபன்: அஸரென்கா விலகல்

அமெரிக்க ஓபன்: அஸரென்கா விலகல்

நியூயார்க் நகரில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) அறிவித்துள்ளார். அஸரென்காவுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை யாருடைய பராமரிப்பில் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. குடும்ப விவகாரம் காரணமாக இந்த முறை அமெரிக்க ஓபனில் பங்கேற்க இயலாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்வதாக அஸரென்கா கூறியிருக்கிறார். 28 வயதான அஸரென்கா 2012, 2013-ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story