மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வி


மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வி
x
தினத்தந்தி 3 Jan 2018 9:00 PM GMT (Updated: 3 Jan 2018 7:55 PM GMT)

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.

புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராம்குமார், முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சுடன் (குரோஷியா) மோதினார். மணிக்கு அதிகபட்சமாக 223 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய அனுபவம் வாய்ந்த மரின் சிலிச் 6–4, 6–3 என்ற நேர் செட்டில் ராம்குமாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6–4, 3–6, 4–6 என்ற செட் கணக்கில் பியாரே ஹக்ஸ் ஹெர்பர்ட்டிடம் (பிரான்ஸ்) போராடினார். இத்துடன் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6–3, 6–2 என்ற செட் கணக்கில் சக நாட்டவர்களான லியாண்டர் பெயஸ்– புராவ் ராஜா இணையை வெளியேற்றியது.


Next Story