ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா பலி: நிவாரணநிதி திரட்டும் பிரபல கூடைபந்து-டென்னிஸ் வீரர்கள்


ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா பலி: நிவாரணநிதி திரட்டும் பிரபல கூடைபந்து-டென்னிஸ் வீரர்கள்
x
தினத்தந்தி 9 April 2020 1:03 PM GMT (Updated: 9 April 2020 1:03 PM GMT)

ஸ்பெயின் நாட்டில் கொரோனா நிவாரணநிதி திரட்டும் பிரபல கூடைபந்து மற்றும் டென்னிஸ் வீரர்கள்

மாட்ரிட்

கொரோனா பாதிப்பால் ஸ்பெயின் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 15238 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த புதன் கிழமை அங்கு ஒரே நாளில் 757 பேர்பலியானார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 683பேர் பலியாகி உள்ளனர். 

மொத்தம் 152446 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

கொரோனா தடுப்பு தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்பெயின் செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவ பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது ஜெர்ஸியை(டி-சர்ட்) ஏலத்தில் விட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் அந்நாட்டு செஞ்சிலுவை சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த சங்கத்துக்கு உதவி செய்ய கடந்த 2019ம் ஆண்டில் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியபோது அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட்டு நிதி திரட்ட ரபேல் நடால் முடிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு எதிரான போராட்டத்திற்காக 11 மில்லியனை திரட்டும் நோக்கத்துடன் ஸ்பெயினில் நன்கொடைகளை ஊக்குவிப்பதற்காக கூடைபந்து வீரர்பால் கசோல் மற்றும் நடால் #NuestraMejorVictoriaஎன்ற ஹேஷ் டேக்குடன் திட்டத்தைத் தொடங்கினர். இது #CruzRojaResponde (செஞ்சிலுவை சங்கத்தின் ஒரு பகுதியாகும்.

ரியல் மாட்ரிட் மற்றும் ஸ்பானிஷ் தேசிய அணி கூடைப்பந்து கூட் நட்சத்திரம் செர்ஜியோ லுல், அர்ஜென்டினாவுக்கு எதிரான 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அணிந்திருந்த ஜெர்சியை ஏலம் விட்டு அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்து உள்ளார்.

Next Story