உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்தது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2017-04-26 22:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. மழைக்காலங்களில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோடைக்காலத்தில் கூட வற்றாமல் ஆண்டு முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியிலிருந்து தண்ணீர் ஓடை வழியாக உயிலட்டி மற்றும் கூக்கல்தொரை கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

தண்ணீர் குறைந்தது

இந்த நிலையில் போதிய மழையில்லாத காரணத்தால் இந்த நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து விட்டது. தற்போது அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியைக் காண வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். எனினும் கோடை மழை அவ்வபோது பெய்தால் இந்த சீசனில் மீண்டும் உயிலட்டி அருவியில் நீர்வரத்து அதிகரித்து சுற்றுலாப்பயணிகளை கவரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்