காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி தியாகராயர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Update: 2024-04-27 06:03 GMT

சென்னை,

நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி! தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!" இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்