மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 28 March 2024 12:34 PM GMT (Updated: 29 March 2024 4:46 AM GMT)

மேற்கு வங்காளத்தில் 17 வேட்பாளர்கள் உள்பட 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் போட்டியிடுகின்றனர். மேலும் பீகார், திரிபுரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் 17 வேட்பாளர்கள் உள்பட 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அங்கு கட்சி காங்கிரசுடன் கூட்டணியில் போட்டியிடுகிறது. மேலும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சண்டையிடும் கேரளாவில் 15 பேர் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.


Next Story