மோகனுடன் நடிக்கும் வனிதா


மோகனுடன் நடிக்கும் வனிதா
x
தினத்தந்தி 4 July 2023 2:37 AM GMT (Updated: 4 July 2023 2:43 AM GMT)

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த மோகன் இப்போது "ஹரா" என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்கள் கொடுத்தவர் என்ற பெருமையும் உண்டு. இவரை மைக் மோகன் என்று அழைக்கின்றனர். பல வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த மோகன் இப்போது 'ஹரா' என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் குஷ்பு, யோகிபாபு, சாருஹாசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் ஸ்ரீ டைரக்டு செய்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 'ஹரா' படத்தில் நடிக்க தற்போது நடிகை வனிதாவும் ஒப்பந்தமாகி உள்ளார். மோகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, "நான் மோகனின் தீவிரமான ரசிகை. அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது'' என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த படத்தில் மோகன் வீடுகளில் உணவு வினியோகம் செய்யும் ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Next Story