ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்த அனிருத் - வைரலாகும் 'வீரன்' படத்தின் புரோமோ பாடல்..!

ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்த அனிருத் - வைரலாகும் 'வீரன்' படத்தின் புரோமோ பாடல்..!

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தின் 'தண்டர்காரன்' புரோமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

சென்னை,

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப் ஹாப் ஆதி 'மீசையை முறுக்கு' படத்தை இயக்கி, கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதி தற்போது 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் 'வீரன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

பேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் தற்போது 'வீரன்' படத்தின் 'தண்டர்காரன்' என்ற புரோமோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Dailythanthi
www.dailythanthi.com