"படுக்கையறை காட்சியில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம்" - பிரியங்கா சோப்ரா அதிரடி கருத்து


படுக்கையறை காட்சியில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம் - பிரியங்கா சோப்ரா அதிரடி கருத்து
x

உண்மையில் திரையில் பார்ப்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அரையில் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

மும்பை

பிரியங்க சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடல் வருகிற ஏப்ரல் 28 ந்தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து உள்ளார். சிட்டாடலின் இந்திய பதிப்பில் சமந்தா நடித்து உள்ளார். இது போன்ற காட்சிகளில் அவரும் காணப்படுவார் என கூறப்படுகிறது. சமந்தா இதற்கு முன்பு குடும்ப மனிதன் 2 படத்திலும் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளா. இம்முறை அந்த காட்சிகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிட்டாடல் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா. நடிகர் ரிச்சர்ட் மேடனுடனான சூடேற்றும் படுக்கையறை காட்சிகள் குறித்து பிரியங்கா சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

உண்மையில் திரையில் பார்ப்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அரையில் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

சிட்டாடல் தொடரில் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளேன். அந்தக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நானும் ரிச்சர்டும் ஒருவருக்கொருவர் உதவி உள்ளோம். சில சங்கடமான கோணங்களில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது நாங்கள் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தோம்.

நான் அவரிடம் உங்கள் கையை அங்கே வைத்து மறையுங்கள் என்று கூறுவேன். அவர் என்னிடம் உன் கையை இங்கே வை' என்று கூறுவார். நாங்கள் உடல் உறுப்புகளை கேமராவில் காட்டாதவாறு கைகளால் மூடிக் கொண்டோம். இதனால் அழுத்தமில்லாமல் காட்சிகளை முடித்தோம் என கூறினார்.

சிட்டாடல் கதை

சிட்டாடல் கதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது.

உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும் குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர்.

ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் (ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க விடாமல் ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், '' இந்தி திரையுலகில் என்னை ஒரு மூலையில் தள்ளி விட முயற்சி செய்தனர். எனக்கு பட வாய்ப்புகள் வராமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்தது.

இவர்களுடன் அரசியல் விளையாட்டை ஆட என்னால் முடியாது என்று தோன்றியது. இதனால் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க நினைத்தேன். அதன் பிறகு இசை ஆல்பத்தில் பணியாற்ற அமெரிக்கா சென்றேன்.

அங்கு புதிய உலகில் அடியெடித்து வைத்தேன். ஹாலிவுட்டில் பே வாட்ச், கேண்டிகோ போன்றவற்றில் நடித்தேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இந்தி திரையுலகில் சிலர் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்'' என கூறி இருந்தார்.


Next Story