அதிரடி கதையில் புதுமுகங்கள்


அதிரடி கதையில் புதுமுகங்கள்
x

`இருளில் ராவணன்' என்ற வித்தியாசமான பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகம் துஷாந் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஶ்ரீது கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமவுலி, திலீபன், முல்லை, ஸ்டாலின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.வி.எஸ். சேதுபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக்கரு. இறுதிக்கட்ட படப் பிடிப்பு ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது'' என்றார்.

இசை: கவாஸ்கர் அவினாஸ், ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்.

1 More update

Next Story