புதரில் பதுங்கிய 7½ அடி நீள மலைப்பாம்பு


புதரில் பதுங்கிய 7½ அடி நீள மலைப்பாம்பு
x
தினத்தந்தி 16 Sept 2022 12:30 AM IST (Updated: 16 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா டவுனில் புதரில் பதுங்கிய 7½ அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது.

சிவமொக்கா;


சிவமொக்கா டவுன் காஜனூர் கிராம பகுதியில் உள்ள துங்கா அணை அருகே கோழிப்பண்ணை உள்ளது. இந்த நிலையில் அருேக உள்ள வனப்பகுதியில் இருந்து மலைப்பாம்பு ஒன்று கோழிப்பண்ணை அருகே உள்ள புதர் பகுதிக்கு வந்து கிடந்துள்ளது.

அப்போது அந்த வழியாக சென்ற ராகேஷ் என்பவர் மலைப்பாம்பை கண்டு அதிா்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், அப்பகுதி மக்கள் உதவியுடன் பாம்பு பிடி வீரரான கிரண் என்பவருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் பாம்பு பிடி வீரா் கிரண் அந்த பகுதிக்கு விரைந்து வந்தார்.

பின்னா் புதர் பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்து சென்று அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டார். பிடிபட்ட மலைப்பாம்பானது 7½ நீள இருக்கும் என கிரண் கூறினார்.


Next Story