அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் வடஇந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை தொடரும். ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Next Story