காஷ்மீரின் அனந்த்நாக் நகரின் முக்கிய சந்திப்பில் மூவர்ணக்கொடி ஒளியில் ஜொலிக்கும் மணிக்கூண்டு
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் முக்கிய சந்திப்பில் புதிதாக மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
இந்திய குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்காக நாடு தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி மணிக்கூண்டில் மூவர்ணக்கொடியின் ஒளியில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அனந்த்நாக் நகரின் மையப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மணிக்கூண்டில் இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களான இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய ஒளிகளில் விளக்குகள் அமைக்கப்பட்டு ஒளிர்ந்து வருகிறது.
Related Tags :
Next Story