கேரள சட்டப்பேரவைக் கூட்டம்: முழு உரையையும் படிக்காமல் கவர்னர் புறக்கணிப்பு


கேரள சட்டப்பேரவைக் கூட்டம்: முழு உரையையும் படிக்காமல் கவர்னர் புறக்கணிப்பு
x

கேரளாவில் சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கியது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரிப் முகமது கான் கவர்னராக இருந்து வருகிறார். அங்கு கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் அவை தொடங்குவது வழக்கம். கவர்னர் உரையில் மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள், நோக்கங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.

அந்த வகையில் இன்று காலை கூட்டம் தொடங்கியதும், கவர்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக கடைசி பத்தியை மட்டுமே படித்த ஆரிப் முகம்மது கான், வெறும் 1.15 நிமிடத்தில் தனது உரையை முடித்தார். இதனால், எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story