தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு - பிரதமர் மோடி விமர்சனம்


தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு - பிரதமர் மோடி விமர்சனம்
x
தினத்தந்தி 18 July 2023 6:29 AM GMT (Updated: 18 July 2023 7:12 AM GMT)

தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்த போதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாங்கள் கடல் வழியாக பைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் இணையதள சேவைகளை அந்தமானுக்கு கொண்டு வந்துள்ளோம். போர்ட் பிளேயரில் மருத்துவக்கல்லூரி கட்டியுள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டம் ஊழலை ஊக்குவிக்க கூட்டப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏறுவதற்கு முன் அந்தமானில் மூவர்ணக்கொடி ஏறிவிட்டது. ஆனாலும், அடிமைத்தனத்தின் அடையாளங்கள் சில இருந்தன. தீவுகளின் பெயர்களை மாற்றியதன் மூலம் அந்த அடையாளங்களை நாம் நீக்கியுள்ளோம்.

குடும்பத்திற்காக இருந்தது... குடும்பமாக இருக்கிறது... குடும்பத்திற்காக இருப்பது தான் எதிர்க்கட்சிகளின் தாரக மந்திரம்.

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் பேசவில்லை. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்த போதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன ' என்றார்.


Next Story