10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி சத்திரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி விட்டு சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் வயிற்றில் இரை அதிக அளவு இருந்ததால் அந்த மலைப்பாம்பினால் சாலையை கடக்க முடிய வில்லை. இதனால் அந்த மலைப்பாம்பு சாலையிலேயே கிடந்தது. இதனால் அவ்வழியாக இருபுறமும் சென்ற வாகனங்கள் அப்படியே நின்றது. இதனையடுத்து வாகனங்களில் வந்தவர்கள் கீழே இறங்கி செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் இணைந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையில் அடைத்தனர். பின்னர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினரிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.