மின்னல் தாக்கி பசு மாடு சாவு
ஊசூர் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலியானது.
வேலூர்
வேலூர் மாவட்டம், ஊசூரை அடுத்த அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசு மாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது மாட்டு கொட்டகைக்கு மற்றும் அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதில் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாடு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் மரம் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், கால்நடை பராமரிப்புத் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story