வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
திருச்சி
மணப்பாறை:
மணப்பாறை காமராஜர் நகரில் உள்ள பயன்பாடு இல்லாத ஒரு வீட்டின் அருகே சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்ததை அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை பிடிக்க முயன்றபோது, அந்த பாம்பு கழிவுநீர் கால்வாய்க்குள் சென்றது. இதனால் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பை பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story