கிராம மக்கள் திடீர் மறியல்


கிராம மக்கள் திடீர் மறியல்
x

கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

கிணறு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அந்தூர் கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை காரணமாக ஆய்க்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் 2 மாதங்களாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆய்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மறியல்

இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று ஆய்குடி மக்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து, ஆய்குடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இங்கு கிணறு வெட்டப்படுவதால் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட காரணமாக அமையும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story