காவல்துறை அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம்; 4 பேர் விசாரணைக்கு ஆஜர்


காவல்துறை அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம்;  4 பேர் விசாரணைக்கு ஆஜர்
x

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த 10-ந் தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்று யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா தனது 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். இன்றும் நாளையும் விசாரணை நடக்கிறது. முதல் நாளான இன்று விசாரணைக்கு 4 பேர் ஆஜர் ஆகியுள்ளனர்.

1 More update

Next Story