வால்பாறை உண்டு உறைவிட பள்ளியில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
வால்பாறை உண்டு உறைவிட பள்ளியில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் கடந்த ஒரு வாரமாக தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகைக்கான தயாரிப்பு பணிகளை செய்து வந்தனர். நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்களது பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து வடை பாயாசத்துடன் 16 வகையான சைவ உணவுகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள வால்பாறை சுற்று வட்டார பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ-மாணவிகள் ஓணம் உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story