மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Oct 2023 7:30 PM GMT (Updated: 11 Oct 2023 7:30 PM GMT)

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் மனநலம் பாதிப்பு அடைந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.சஹானா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.அமர்ஆனந்த் ஆகியோர் மனநலம் பாதித்த மாற்றுத்திறன் மாணவர்கள், அவருடைய பெற்றோர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊத்தங்கரை வக்கீல்கள் சங்க தலைவர் மூர்த்தி, துணைத் தலைவர் பிரபாவதி, வக்கீல்கள் குணசீலன், மாலதி, கேசவன், சதீஷ், வருண்விக்னேஷ், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியை மாதம்மாள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஊத்தங்கரை வக்கீல் சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவை சார்ந்த லாவண்யா, இனியன், ஜே.ஆர்.சி. ஆசிரியர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story