மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
x

கெஜல்நாயக்கன்பட்டியில்மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள மேற்பார்வையாளர் சுபாஷ்சந்தர் தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சென்னமூர்த்தி, புவனேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்றுநர் ஜானகி, குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கோவிந்தன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை அடைந்தனர்.

ஊர்வலத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தயாளன், சிறப்பாசிரியர்கள் ரோஜினி, குமுதா, இயன்முறை மருத்துவர் சொருபராணி, பகல்நேர பராமரிப்பு மையத்தின் ஆசிரியர் மோகனாம்பாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோன்று ஆதியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர், சங்கர் உள்ளிட்ட ஆசிரியரகள்், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story