அதிக அளவில் குவிந்து வரும் செங்கால் நாரை பறவைகள்


அதிக அளவில் குவிந்து வரும் செங்கால் நாரை பறவைகள்
x

சீசன் காலம் தொடங்கி உள்ளதால் கோடியக்கரை சரணாலயத்தில அதிக அளவில் செங்கால் நாரை பறவைகள் குவிந்து வருகிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

சீசன் காலம் தொடங்கி உள்ளதால் கோடியக்கரை சரணாலயத்தில அதிக அளவில் செங்கால் நாரை பறவைகள் குவிந்து வருகிறது.

கோடியக்கரை சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு

ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

பறவைகள் சீசன் தொடக்கம்

இந்த நிலையில் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சக்கணக்கில் வந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ரஷியா, சைபிரியாவில் இருந்து செங்கால் நாரை பறவைகள் வந்துள்ளன.

கூட்டம், கூட்டமாக வருகிறது

தற்போது அடிக்கடி மழை பெய்வதாலும், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும் இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து சரணாலயத்தில் உள்ள ஏரிகளில் அமர்ந்துள்ளதையும், சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது.

இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை மாலை வேளைகளில் கண்டுகளிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story