புனித அந்தோணியார் தேவாலய தேர் பவனி திருவிழா தொடக்கம்


புனித அந்தோணியார் தேவாலய தேர் பவனி திருவிழா தொடக்கம்
x

புனித அந்தோணியார் தேவாலய தேர் பவனி திருவிழா தொடங்கியது.

தஞ்சாவூர்

கும்பகோணம் உள்ளூர், முல்லை நகர் பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருத்தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு புனித அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பல்வேறு வீதிகள் வழியாக வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தை அடைந்தது. பின்னர் பங்குத்தந்தை பிலோமின்தாஸ் கொடியினை புனிதம் செய்து, கொடிமரத்தில் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.


Next Story