பரப்பாடியில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா


பரப்பாடியில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா
x

பரப்பாடியில் ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரிசுத்த திரித்துவ ஆலயத்தை பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடியில் ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரிசுத்த திரித்துவ ஆலயத்தை பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

ரூ.8 கோடியில் புதிய ஆலயம்

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தில் உள்ள முக்கியமான திருச்சபைகளில் ஒன்று பரப்பாடி சேகரம் ஆகும். பரப்பாடியில் உள்ள பரிசுத்த திரித்துவ ஆலயம் புதிதாக கட்ட சபை மக்களால் திட்டமிடப்பட்டு, ரூ.8 கோடி மதிப்பில் புதிதாக ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலய பிரதிஷ்டை விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொள்ள நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் பரப்பாடி காமராஜர் பஸ் நிறுத்தத்துக்கு வருகை வந்தார். அப்போது சபை மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் குதிரை சாரட் வண்டி மூலம் ஆலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் புதிய ஆலயத்தை பிரதிஷ்டை செய்து 'ரிப்பன்' வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பிரதிஷ்டை ஆராதனை, பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற அசன விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பஜனை பிரசங்கம்

இரவு ஸ்ரீவைகுண்டம் சேகரகுரு எம்.எஸ்.ஜே.வேதநாயகம் கலந்து கொண்ட பஜனை பிரசங்கம் நடைபெற்றது. இந்த பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையில், பேராயர் மனைவி ஜாய்ஸ் பர்னபாஸ், திருமண்டல உப தலைவர் டி.பி.சுவாமிதாஸ், குருத்துவ காரியதரிசி பாஸ்கர் கனகராஜ், திருமண்டல தொடக்க நடுநிலைப்பள்ளி மேலாளர் அருள்ராஜ் பிச்சமுத்து, தெற்கு சபை மன்ற தலைவர் டி.சி.ஜி.துரைசிங், மேற்கு சபை மன்ற தலைவர் பிரே ஜேம்ஸ், குருவானவர்கள் டி.கே.ஸ்டீபன், ஜோஸ்வா, அப்பாதுரை ஞானராஜ், முத்துராஜ், வேதன்பு, ஜான் சாமுவேல், பர்னபாஸ், ஜேசுதாசன், ஆமோஸ், சாமுவேல், செல்வராஜ், டாக்டர்கள் கிறிஸ்டோபர், அலெக்ஸ் எட்வர்டு, ரவி எட்வின், பல் டாக்டர் ஹெம்லா சிசில், நே.ஜெஸ்கரன் இஸ்ரவேல், புஷ்பா ஜெஸ்கரன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டபிள்யூ.ராஜசிங், மாவட்ட வக்கீல் சங்க செயலாளர் டி.காமராஜ், இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகி ராஜபிரபு, காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர் ஜெஸ்கர் ராஜா, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மெகுலன் ராசா, நெல்லை ஜெயசீலன், அலெக்சாண்டர், ஸ்டாலின் பிரபுபாண்டி, ஜேக்கப் பாக்கியராஜ், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் பரப்பாடி ஞானராஜ், நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், இளைஞர் அணி நிர்வாகி சேர்மபாண்டி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பி.பி.மணி, பத்மசிங் செல்வமீரான், ஜேக்கப்பாண்டி, ராமஜெயம், சாலமோன், கோயில்பிச்சை, அ.தி.மு.க. கிளைச்செயலாளர் அபி ஸ்வீட்ஸ் அ.வேல்துரை, தொழிலதிபர்கள் ஆபிரகாம் தர்மராஜ், பினேகாஸ், ஜோனல் பிரடெரிக், சாமுவேல்ராஜ், ஜானகிராமன், செண்பகராமநல்லூர் பெருமாள், எழுத்தாளர் மதுரா, ஆசிரியர்கள் மோகன், செல்வின், திருமண்டல பெருமண்டல உறுப்பினர்கள் யோவான் பிரபு, ஐன்ஸ்டீன், சர்ச் கவுன்சில் உறுப்பினர் ஜெருஷ் ஐசக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பரப்பாடி சேகர தலைவர் பி.கிறிஸ்டோபர் தவசிங், சேகரகுரு எஸ்.ஆபிரகாம் அருள்ராஜா, சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் கிங், சேகர செயலர் எம்.பொன்னுதுரை, சேகர பொருளாளர் வி.சீலன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


Next Story