ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி
தகரையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே தகரை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான கட்டிட பணியை தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலாவதிமுருகேசன், ஒன்றிய பொறியாளர் ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் திவ்யபாரதி கோம்பையன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து திம்மாபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் மரக்கன்றுகளை உதயசூரியன் எம்.எல்.ஏ. நட்டு தொடங்கி வைத்தார்.