பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை


பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை
x

ஓட்டப்பிடாரம் அருகே பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாலசமுத்திரம் பஞ்சாயத்து வெங்கடேசபுரம் கிராமத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெள்ளத்தில் சிக்கிய மக்களையும், வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளையும் பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். இதில் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) குணசேகரன், சிறப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ஜோசப் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கால்நடைகள் மீட்பது குறித்து செய்முறைப் பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் விஜயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி, மருத்துவ அலுவலர்கள் சுசீலா, செரிதா, மண்டல துணை தாசில்தார்கள் வடிவேல்குமார், ஆனந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று முக்காணி தாமிரபரணி ஆற்றிலும், புன்னக்காயல் கடலில் ஆறுகள் சேரும் இடத்திலும் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி தலைமையில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஏரல் தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் மாதிரி ஒத்திகைகளை தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அதிகாரி ஜோ சகாயராஜ் மற்றும் முருகையா தலைமையிலான குழுவினர் நடத்தினர்.


Next Story