பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அரசு கல்லூரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சார்பில் நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரிடர் மீட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி காப்பாற்றுவது, சாலை விபத்துகள், தீ விபத்துகள் போன்ற விபத்துகள் ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலை வீரர்கள் நடித்து காட்டினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பூம்புகார் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் துரைமுருகன் செய்திருந்தார்.


Next Story