பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வாய்மேடு

தலைஞாயிறு பாலசமுத்திர குளத்தில் பேரிடர் காலங்களில் மனிதனை மட்டும் இன்றி கால்நடைகளை மீட்பது குறித்து பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். இதில் வருவாய் த்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை,கால்நடைத்துறை, போக்குவரத்துத்துறை போலீசார் கலந்து கொண்டு இயற்கை பேரிடர் ஏற்படும் போது அதில் சிக்கி உள்ள மக்களை மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் தலைஞாயிறு பேருராட்சிசெயல் அலுவலர் குகன், பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் , வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story