பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி


பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி
x

தேனி மாவட்டத்தில், 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.

தேனி

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் நேற்று நடந்தது. தேனி குன்னூர் வைகை ஆறு, வீரபாண்டி முல்லைப்பெரியாறு, உப்புக்கோட்டை முல்லைப்பெரியாறு, பெரியகுளம் வராகநதி ஆகிய ஆற்றுப் பகுதிகளிலும், லோயர்கேம்ப்-குமுளி மலைச்சாலையிலும் ஒத்திகை பயிற்சி நடந்தது.

குன்னூர் வைகை ஆற்றில் நடந்த ஒத்திகை பயிற்சியை கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், வெள்ளத்தில் சிக்கும் மனிதர்கள், ஆட்டுக்குட்டிகளை மீட்பது போன்று ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும், மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, ஆண்டிப்பட்டி தாசில்தார் மணிமாறன், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story