பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:46 PM GMT)

கோலியனூர் அரசு பள்ளியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம்

பேரிடர் மேலாண்மையை முன்னிட்டும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் உதவி அலுவலர்கள் ஜெய்சங்கர், சிவசங்கரன், சிறப்பு நிலைய அலுவலர் ராஜவேலு, முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஷாஜகான், பிரபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.அப்போது புயல், மழை வெள்ள காலங்களில் ஆபத்தில் சிக்கி உள்ளவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள், ஆபத்து காலத்தில் உயரமான கட்டிடங்களில் சிக்கியிருப்பவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் குறித்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story