கந்தூரி விழாவில் நேர்ச்சை வினியோகம்
ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழாவில் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. இதையொட்டி ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகமது (ஒலி) ஆகியோர் நினைவிடத்தில் சந்தனம் மெழுகுதல் மற்றும் பச்சை போர்வை போர்த்தப்பட்டது. தொடர்ந்து மவ்லூது ஷரீப்ஓதுதல், ராத்திப்புத்துல் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை சிறப்பு துவா ஓதப்பட்டு நேர்ச்சை வினியோகமாக பச்சை பட்டுதுணி, பூந்தி வழங்கப்பட்டது. இதை பரம்பரை டிரஸ்டி எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி, அசிம் அகமது பிஜிலி ஆகியோர் வழங்கினர். நேற்று கொடி இறக்கம் நடந்தது.
Related Tags :
Next Story