மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
சிவகாசியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள மினி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. 10 ஓவர் கொண்ட இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் சிவகாசி பயர்சிட்டி அணியும், நடுவப்பட்டி சூப்பர் பாய்ஸ் அணியும் மோதியது. இதில் சிவகாசி பயர்சிட்டி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பயர்சிட்டி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், கோப்பையும் முதல் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் ரூ.5 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் 2-வது பரிசாக நடுவப்பட்டி சூப்பர் பாய்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசும், கோப்பையும் பியர்லெஸ் அணிக்கு 3-வது பரிசாக வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்பையும் 4-வது பரிசாக ஈஞ்சார் சிசி அணிக்கு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஜே.ஜே.பாய்ஸ் அணியினர் செய்திருந்தனர்.