200 ஆண்டுகளாக நடைபெறும் சரித்திர நாடகம்


200 ஆண்டுகளாக நடைபெறும் சரித்திர நாடகம்
x

தஞ்சை அருகே கொல்லாங்கரையில் 200 ஆண்டுகளாக சரித்திர நாடகம் நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவின் போது மக்கள் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே கொல்லாங்கரையில் 200 ஆண்டுகளாக சரித்திர நாடகம் நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவின் போது மக்கள் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி நாளன்று இரவில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சரித்திர நாடகங்கள்

அதன்படி தஞ்சை அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது 3 நாட்களுக்கு சரித்திர நாடகங்களான ராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்திரி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த நாடகங்களுக்கு தேவையான கதாப்பாத்திரங்களுக்குரிய கலைஞர்கள் கிராம மக்களே நடித்து வருகின்றனர்.குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர். வெள்ளித்திரை, சின்னத்திரை ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்திலும், சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

200 ஆண்டுகளாக நடைபெறுகிறது

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகிய மூன்று நாட்களும் ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடைபெறுகிறது.இதுகுறித்து கொல்லாங்கரை கிராம மக்கள் கூறுகையில், "எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3 நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story