குப்பை கழிவுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குப்பை கழிவுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கழிவுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெற்றோர் தங்களது இல்லங்களில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்கிட மாணவ-மாணவிகள் அறிவுறுத்த வேண்டும், மக்கக்கூடிய ஈரமான கழிவுகளை புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் வழங்கலாம், ஆனால் மக்காத உலர் கழிவுகளை புதன்கிழமை மட்டும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜாமணிகுமார், பாஸ்கரன், மணிவண்ணன், பள்ளி தலைமையாசிரியர் இராசதுரை, மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story