குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி


குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ராணிப்பேட்டையில் குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் வளர்மதி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் முன்னோடி வங்கிகள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தில் 'தூய்மையே சேவை குப்பையில்லா இந்தியா' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

உறுதி மொழி

தொடர்ந்து சுயமாக சுத்தமான பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் உடல் நலத்தை பாதுகாப்போம். பள்ளி, வீடு, குடியிருப்பு, பணியிடம், பொது இடங்கள், விளையாடுமிடம், பூங்கா, கிராமம் மற்றும் மாநிலம் ஆகியவற்றின் உட்பகுதி மற்றும் புறம் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வோம். குப்பைகளை உரிய குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவோம். நீர் மற்றும் காற்றினை சுத்தமாக வைத்திருப்போம். கழிவறையினை பயன்பாட்டிற்கு பின்னர் சுத்தமாக பராமரிப்போம் என்ற உறுதிமொழியினை வங்கி பணியாளர்கள் மற்றும் சமூக நலத்துறை பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜி குமார், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story