மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள்
குந்தாரப்பள்ளியில் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் நடந்தது.
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி தலைமை தாங்கினார். போட்டியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். இதில், 14, 17 மற்றும் 19 வயது என 3 பிரிவுகளில், ஒரு பிரிவிற்கு 8 போட்டிகள் என மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story