சிறுகூடல்பட்டியில் கலைஞர் சிறுவர் பூங்கா திறப்பு விழா
சிறுகூடல்பட்டியில் கலைஞர் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகூடல்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.14 லட்சத்தில் கலைஞர் சிறுவர் பூங்கா, குமாரப்பேட்டை கிராம ஊராட்சியில் ரூ.7.50 லட்சத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி திறந்து வைத்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, பெரியார் சமத்துவபுர திட்டத்தினை ஏற்படுத்தினார். அவ்வழியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, 121 ஊராட்சிகள், 700-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 6 பேரூராட்சிகளை உள்ளடக்கியதாகும். தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் மட்டுமன்றி, வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சிவராமன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் நெடுமரம் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் நாராயணன், அலுவலர்கள் அருள்பிரகாசம், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.